Chennai

One God One World Family என்ற தலைப்பில் மத தலைவர்களுக்கான மாநாடு செப்டம்பர் 15-ஆம் தேதி பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக பல்வேறு மதத்தலைவர்கள் மற்றும் அதை பின்பற்றக்கூடியவர்களுக்கு பிரம்மா குமாரிகள் ரிட்ரீட் சென்டர் சுங்குவார்ச்சத்திரத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிருஸ்டியன், புத்தம், சமணம் மற்றும் பல்வேறு மதத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் சுமார் 1000 -த்திற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்கள். கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கப்பட்டது. தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பி.கே.பீனா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் மரியாதைக்குரிய மேதகு.பண்வாரிலால் புரோகித் அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்தார்கள். ஆளுநர் அவர்கள் தனது அனுபவ உரையில் இவ்விடம் முழுமையாக ஆன்மீக சூழ்நிலை, தூய்மை மற்றும் அமைதியாக உள்ளது என்றும் பிரம்மா குமாரிகள் இயக்கமானது மனிதகுலத்தை தூய்மை, அமைதி மற்றும் செழிப்பாக மாற்றுவதில் மேற்கொண்ட முயற்சியை வெகுவாய் பாரட்டினார். பிரம்மா குமாரிகள் அமைப்பு என்பதைத் தாண்டி காந்திய கொள்கைகளுக்கும், அனைத்து மதநம்பிக்கைகளுக்கும் ஒத்த ஒரு உலகம், ஒரு குடும்பத்தின் ஒற்றுமையை பரப்பும் இயக்கமாக விளக்குவதாக கூறினார். முக்கிய விருந்தினர்களாக சுவாமி குருரெத்தனம் ஞானதபஸ்வி பொதுச் செயலாளர். சாந்தகிரி ஆசிரம், திருவனந்தபுரம் Rev.fatherS.தாமஸ் இளங்கோ ரெட்டார் மற்றும் பாரிஸ் போதகர் சென்னை மறை மாவட்டம், மைலாப்பூர் மற்றும் மௌலாவி K.M.இல்யாஸ் ரியாஜி தலைமை இமாம் ஈத் கா மஸ்ஜித் மந்தவெளி சென்னை ஆகியோர் கலந்து வாழ்த்துரைகளை வழங்கினார்கள். மூத்த இராஜயோகினி சகோதரி பி.கே.முத்துமணி அவர்கள் அனைவரையும் ஆழ்ந்த அக அமைதிக்கு எடுத்துச் சென்றார். மூத்த இராஜயோகினி பி.கே.கலாவதி அவர்கள் நன்றியுரையாற்றினார். சகோதரி பி.கே.நீலிமா அவர்கள் முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்;. இதனை தொடர்ந்து “ஆன்மீக தலைவர்கள் புதிய உலகிற்கான அறிவிப்பாளர்கள்” என்ற தலைப்பில் மதுபனத்திலிருந்து வந்திருந்த சகோதரி பி.கே.உஷா அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அவர் ஆன்மீகத்தின் முக்கியத்துவம் மற்றும் புதிய உலகம் அமைப்பதில் ஆன்மீக தலைவர்களின் சமூதாயப் பொறுப்பை பற்றியும் எடுத்துரைத்தார்கள். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக மதுபனத்தின் ஆன்மீகப் பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகி பி.கே.இராமநாத் அவர்கள் தனது கருத்துகளை வழங்கினார்கள். தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான அமைச்சர் செவ்வூர் S.இராமச்சந்திரன் அவர்கள் தனது வாழ்த்துக்களை வழங்கினார்கள். ஸ்ரீ கிரிதாரிதாஸ் அவர்கள் மறைமலைநகர், சக்த ஸ்ரீ வாராகிமணிகண்ட சுவாமிஜி, ஸ்ரீ வாராகி மந்திராலயம் கோவை, ஸ்ரீமத் சுவாமி chaithan yananda ji ஸ்ரீ விவேகாந்தர் ஆசிரமம் வெள்ளிமலை, கன்னியாக்குமாரி மாவட்டம் ஆகியோர் இத்தலைப்பின் கீழ் தங்களது கருத்துகளைத் தெரிவித்தார்கள்.