காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரக்.ஷா பந்தன் விழாவை முன்னிட்டு காஞ்சிபுர சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு.எழிலரசன் அவர்களுக்கு சகோதரி பி.கே.அகிலா அவர்கள் புனித கயிற்றை அணிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கூட்டுறவு மாணவர்களுக்கு இராஜயோக தியானம் வகுப்பும் நடைபெற்றது. இதில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். காஞ்சிபுரம் முதியோர் இல்லத்தில் திரு.சங்கரநாராயணன் அவர்களுக்கு சகோதரி பி.கே.அகிலா அவர்கள் ராக்கி அணிவித்தார். டாக்டர்.பி.கே.பிரபாகர் ஆகியோர் “வயோதிகத்தில் பெருமிதத்துடன் வாழ்வோம்” என்ற தலைப்பில் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு வகுப்பு நடத்தினார்.