சிவகாசி

சிவகாசி தியான மையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இராமேஸ்வர பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா அவர்கள் ஆன்மீக உறையாற்றி புனித கயிறு அணிவித்தார்கள். அந்நிகழ்ச்சியில் விஜயா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ராஜேஷ் தக்கர் மற்றும் டாக்டர்.ஆர்த்தி தக்கர் ஆகியோர் சிறப்பித்தார்கள். சுமார் 150 -க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பங்கேற்று பயனடைந்தார்கள். இவ்விழாவை சிவகாசி பொறுப்புச் சகோதரி பி.கே.சுதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதி சிவகாசி தியான மையத்தில் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக உதவி செயலாளர், ரோட்டரி மெட்ரிக்குலேசன் பள்ளி திரு.ஜெயப்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டார்கள்.