தூத்துக்குடி

செப்டம்பர் 9 மற்றும் 10 -ஆம் தேதிகளில் தூத்துக்குடி தியான மையத்தில் மதுவனத்தின் சகோதரர் இராஜயோகி பி.கே.இராம்நாத் அவர்கள் ஆன்மீக வகுப்புகளை நடத்தினார். அந்த வகுப்புகளில் சுமார் 300 பிரம்மா குமார், குமாரிகள் கலந்து கொண்டார்கள். அமிர்த வேளையில் 100 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.
சர்வதேச அமைதி நாளை முன்னிட்டு ௐ சாந்தி தியான மண்டபத்தை சுற்றி 20 மரங்கள் நடப்பட்டது.
V.K.மகளிர் தங்கும் விடுதி, S.R.S.மகளிர் தங்கும் விடுதி, சித்ரா மகளிர் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் “கோல்டன் என்லைட்மெண்ட் பார் கோல்டன் ஏஜ்” என்ற தலைப்பில் தூத்துகுடி மைய பொறுப்பு சகோதரி பி.கே.அருணா அவர்கள் கருத்துக்களை வழங்கினார்கள். அந்நிகழ்ச்சிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.