சென்னை

சென்னை மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் அடையாறு பிரம்மாகுமாரிகள் இனைந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி Building volunteer Networks என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தினார்கள். முக்கிய விருந்தினராக கலந்துகொண்டசென்னை சமூக நலதிட்ட அறிவாற்றல் தொழில்நுட்ப தீர்வின் உலகலாவிய தலைவர் திரு.பிரிதிவ்ராஜ் ஃபேரங்க்ளின்மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத்தை பற்றி விரிவாக எடுத்துறைத்தார். மேலும் விளையாட்டில் பங்கேற்பாளரை ஈடுபடுத்தியதுடன் தனது மன்றத்தின் மூலம் செய்கின்ற சேவைகளை பற்றி எடுத்துரைத்தார். மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத்தின் தலைவர் டாக்டர். V.G.சந்தோசம் நேனா ஜெரியன்ஸின் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார், மன்றத்தின் செயளாலர் திரு.சுப்பராஜ் நிகழ்ச்சியினை ஒருங்கினைத்தார். ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர்.P.R.கோகுலகிருஷ்ணன் இங்கு நடக்கும் நிகழ்வுகள் முதியோர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருக்கிறது என்று கூறினார். சென்னை அடையாறு பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்பு சகோதரி இராஜயோகினி பி.கே.முத்துமனி இராக்கி கயிற்றின் முக்கியத்துவத்தை, சகோதரதுவத்தைப் பற்றி விளக்கினார். வாறு நற்பண்புகளை கடைபிடிப்பது என்பதனை பற்றி சிறப்புறையாற்றினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் விளக்கேற்றி பொறுமைசக்தியினை கடைபிடிப்பதற்கான உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.