மும்பை – ND TV

மகாத்மா காந்தியின் 150 – வது பிறந்தநாளில் பாரதத்தை ஆரோக்கியமாக்குவோம் என்ற தலைப்பில் N.D.TV-யில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மும்பையில் உள்ள yeshraj திரைப்பட ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனேக அரசியல்வாதிகள், சமூகசேவகர்கள், மதத்தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், பிரம்மாகுமாரிகள் அமைப்பினர் மற்றும் பல திரைப்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். “தூய்மையின் மூலம் ஆரோக்கியம்” என்ற கருத்தில் 12 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை திரையுலகில் புகழ் பெற்ற நடிகர் திரு.அமிதாப்பட்சன் அவர்கள் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சி மூலம் ஆரோக்கியம் மற்றும் தூய்மை குறித்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தங்கள் கருத்துகளை வழங்கினார்கள். அப்போது பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மூத்த இராஜயோகினி ஆசிரியை பி.கே.சிவானி அவர்கள் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை குறித்து சொல்லும்போது -எண்ணங்கள் உடல்மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.