சென்னை

சென்னை : அக்டோபர் 1 -ஆம் தேதி சென்னை ஹேப்பி வில்லேஜ் ரிட்ரீட் சென்டரில், 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு “வயோதிகத்தில் பெருமிதத்துடன் வாழ்வோம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் துவக்க விழாவில் மதுபன் டாக்டர் b.k. mahesh kemathri m.b.b.s அவர்கள், திரு.மனோகரன் அவர்கள் நிர்வாக பங்குதாரர் S.M.சில்க்ஸ் காஞ்சிபுரம், டாக்டர் திரு. சஞ்சய் காந்தி அவர்கள், HOD யோகா மற்றும் நேச்சுரோபதி அரசு மருத்துவக்கல்லூரி வேலூர், மூத்த இராஜயோகினி ஆசிரியை பி.கே.கலாவதி அவர்கள், தமிழக, பாண்டிச்சேரி மற்றும் தென் கேரள மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா அவர்கள், மூத்த இராஜயோகினி ஆசிரியை பி.கே.தேவி ஆகியோர் கலந்து கொண்டனர். முக்கிய வகுப்புகள், மதுபன் டாக்டர் b.k. mahesh kemathri m.b.b.s அவர்கள், டாக்டர் திரு. சஞ்சய் காந்தி அவர்கள் HOD யோகா மற்றும் நேச்சுரோபதி அரசு மருத்துவக்கல்லூரி வேலூர், சகோதரர் பி.கே.சிவராமகிருஷ்ணன் அவர்கள், கற்றல் மற்றும் மேம்பாட்டுத்தலைவர், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை சென்னை, டாக்டர். பி.கே.பிரபாகர் அவர்கள் இணைப்பேராசிரியர் அரசு மருத்துவக்கல்லூரி வேலூர், ஆகியோர்களால் வழங்கப்பட்டது. இதில் சுமார் 75 பிரம்மாகுமார் சகோதரர்கள் மற்றும் தாய்மார்களுக்கு சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். இதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.