தமிழ்நாடு – Chennai

தமிழ்நாடு அரசு சார்பாக 150 -வது காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சென்னையைச் சார்ந்த பிரம்மா குமாரிகள் மெரினா பீச் காந்தி சிலையிலிருந்து கிண்டி காந்தி நினைவரங்கம் வரை நடைபெற்ற சைக்கிள் யாத்திரையில் கலந்து கொண்டார்கள். பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் யாத்திரையை துவக்கி வைத்தார். மேலும் அன்று நடந்த பஜனை நிகழ்ச்சியில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் தாய்மார்கள் ஆன்மீகப் பாடல்களை பாடினார்கள்.