திருவண்ணாமலை

திருவண்ணாமலை : ஒவ்வொரு வருடமும், முதியோர்களுக்குரிய உரிமைகளையும் சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச முதியோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவ்வகையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பிரம்மாகுமாரிகளின் சிவஜோதி தியான ஆலயத்தில் “வயோதிகத்தில் பெருமிதத்தோடு வாழ்வோம்” என்ற தலைப்பில் சர்வதேச முதியோர் தினம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட பிரம்மாகுமாரிகள் அமைப்பின் பொறுப்பு சகோதரி இராஜயோகினி பி.கே. உமா அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்போது சமூக நலனில் முதியோர்களின் பங்கு, ஆரோக்கிய வாழ்விற்கான எளிய உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்கள், மன மகிழ்வு நிறைந்த அமைதியான வாழ்வை வாழ்வதற்கான குறிப்புகள், வயோதிகத்தை நலமாகவும், பெருமிதத்துடனும் வாழ்வதற்கான எளிய மனப்பயிற்சி ஆகியவற்றைப் பற்றி விளக்கி கூறினார். இந்நிகழ்சியில் முக்கிய விருந்தினராக lions club -ன் மாவட்டத் துணை இயக்குநர் Dr. K. Subramaniyam, அரசு ஓய்வுபெற்ற மாவட்ட அதிகாரிகளின் சங்கப் பொதுச் செயலாளர் திரு.அப்புசிவராஜ், அரசு ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் துறைத் தலைவர் DSP திரு.வைத்தியலிங்கம், கூட்டுறவு வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர், Vasavi club தலைவர் திரு.ஆர்.ரங்கநாதன், திருவண்ணாமலை பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்பு சகோதரி இராஜயோகினி பிகே உமா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் முதியவர்கள் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.