திருவாரூர்

செப்டம்பர் 30-ஆம் தேதி திருவாரூர் பிரம்மாகுமாரிகள் புலிவலம் கீதா பாடசாலையில் 9 நாள் நவராத்திரி கொலுவின் தொடக்க விழா நடைபெற்றது. தொழில் அதிபர் பால்வண்ணன் அவர்கள் விழாவினை தொடக்கி வைத்தார். திருவாரூர் கிளை நிலைய பொறுப்பு சகோதரி பி.கே.முத்துலெட்சுமி பொது மக்களுக்கு நவராத்திரி விழாவின் ஆன்மீக ரகசியங்கள் பற்றியும் வாழ்க்கையில் எவ்வாறு நற்பண்புகளை கடைபிடிப்பது என்பதனை பற்றியும் சிறப்புரையாற்றினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் விளக்கேற்றி பொறுமை சக்தியினை கடைபிடிப்பதற்கான உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.