கர்னால்

இதய நோயாளிகளுக்க இராஜயோக தியானமே சிறந்த வலி நிவாரணி என மதுவனத்தின் மூத்த இருதயவியல் மருத்துவர் சதீஷ் குப்தா அவர்கள் கர்னால் நகரில் நடந்த முப்பரிமான சுகாதார முகாமில் பங்கேற்றவர்களுக்க விளக்கி சொன்னார். இதுவரை 9000-த்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளார்.
இந்த முகாமின் போது பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாட்டியா, நிஃபா அமைப்பின் தலைவர் பிரித்பால் சிங் பன்னு, அசன்த் சட்ட மன்ற உறுப்பினர் சம்சேர் சிங் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் பீம் சேன் மேத்தா, திரௌந்தா சட்ட மன்ற உறுப்பினர் ஹர்விந்தர் கல்யான், கல்பனா சாவ்லா அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர்.ஜேசி துரேஜா, நகராட்சி துணை கமிஷ்னர் தீரஜ் குமார், விர்க் மருத்தவமணை இயக்குனர் டாக்டர் தல்விர் சிங், நகர மேயர் ரேனு பாலா, செக்டார் 7லில் இயங்குகின்ற பிரம்மாகுமாரிகள் கிளை நிலைய பொறுப்பு சகோதரி பி.கே.பிரேம், மூத்த இராஜயோக ஆசிரியர் பி.கே.மெஹர்சந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.
டாக்டர் சதீஷ் குப்தாவின் ஆலோசனைகள் உடல் ஆரோக்கியத்தோடு கூடவே ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவி செய்கிறது என வந்திருந்த விருந்தினர்கள் தெரிவித்தனர்.