பட்டுக்கோட்டையில் ராஜயோக கண்காட்சி

பட்டுக்கோட்டை அதிராம்பட்டினத்தில் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில், இராஜயோக பட விளக்கக் கண்காட்சி மற்றும் இந்திய சுதந்திர பவள விழா கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புடன் நிகழ்த்தப்பட்டது. இதில் 350 – க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியினை அக்கோவிலின் பொறுப்பாளர் திரு. பரமசிவம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இறுதியாக அவருக்கு பட்டுக்கோட்டை பிரம்மா குமாரிகள் அமைப்பின் பொறுப்பு சகோதரி BK விமலா அவர்கள் இறை நினைவு பரிசினை வழங்கினார்.