பிரம்மா குமாரிகள் ஏற்பாடு செய்திருந்த சாந்தி காரியகர்மம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் இன்று உலக அமைதிக்காவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பிரம்மா குமார் சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு அமைதியின் அலைகளை பரவச் செய்து கொண்டே நடந்தார்கள். இந்த பேரணியை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திருமதி G.வனிதா, DC, HQ, மதுரை மாநகர காவல், BK.உமா அவர்கள், பிரம்மாகுமாரிகள் மதுரை துணைமண்டல ஒருங்கிணைப்பாளர், மதுரை, Dr.பாண்டிய மணி அவர்கள் இயக்குநர், பண்பு கல்வி நிகழ்வுகள், பிரம்மா குமாரிகள், மவுண்ட் அபு, ராஜஸ்தான், ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தார்கள். இந்த பேரணி இன்று (19-06-2022) காலை மணி அளவில் ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு மதுரை துணைமண்டலம், விஷ்வ சாந்தி பவனில் சென்று முடிவடைந்தது.