நாகர்கோவில்

நாகர்கோவில் இலெட்சுமி மஹாலில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கன்னியாகுமாரி மாவட்டத்தின் IPS அதிகாரி ASP ஜிவாகர், AJJ கிஷோர் அக்குபிரசரின் CEO அலுவலர் திருமதி.பிருந்தா ஆகியோர் பங்கு பெற்றனர். இதைத் தொடர்ந்து அர்மெத் ரிசர்வ் முகாமில் இராஜயோகா தியானப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரி திரு. ஸ்ரீநாத் IPS அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். சகோதரி B.K.கோகிலா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள்.