மதுரை:

மதுரைவிஷ்வ சாந்தி பவன் சார்பாக ஜுலை 13 -ஆம் தேதி வேதிக் வித்யாஷ்ரம் CBSE பள்ளி மாணவர்களுக்கு Art of Living என்ற தலைப்பில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட பள்ளியின் தாளாலர் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் பிரம்மாகுமாரிகளின் சேவை முறைகளை பாராட்டினார். 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். சகோதரி B.K.வள்ளி இராஜயோகா பயிற்சியினை வழங்கினார்கள்.
ஜுலை 10 -ஆம் தேதி மதுரை விஷ்வ சாந்தி பவனில் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆளுமை வளர்ச்சிக்கான இராஜயோகா பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டது. மதுரை துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி சகோதரி B.K.உமா அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் லட்சியம் இருக்க வேண்டும் இலக்கை அடைவதற்கான பயிற்சியை இராஜயோகா கல்வி கற்றுத்தரும் என்று அறிவுறுத்தினார். இதில் முக்கிய விருந்தினராக பங்கு பெற்ற SPJ மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திருமதி.P.அபர்னா பிரம்மாகுமாரிகளின் சேவைகளை பாரட்டினார். மதுரை துணை மண்டல இயக்குனர் இராஜயோகினி சகோதரி B.K.மீனாட்சி அவர்கள் நாட்டின் தூண்களாகிய நீங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று கூறினார்.
ஜுன் 21-ஆம் தேதி மதுரை அண்ணாநகர் கிளை நிலையம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி, பள்ளி மாணவர்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனை போன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு 18 நிகழ்ச்சிகள் நடத்தபெற்றது. மதுரை அண்ணாநகர் கிளை நிலைய பெறுப்பு சகோதரி B.K.ராணி, மற்றும் B.K.கீதா, B.K.ராஜலெட்சுமி, B.K.கார்த்திகா ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
ஜுன் 26 -ஆம் தேதி சோழவந்தான் ஜானகி மாரியம்மன் கோவிலில் உன்னத வாழ்விற்கு இராஜயோகா தியானம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தபெற்றது. இராஜயோகா ஆசிரியை மதுரை CMR Road, கிளை நிலைய பெறுப்பு சகோதரி B.K.கோமதி சொற்பொழிவு வழங்கினார். கிராம தலைவர்கள் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர். சுமார் 1000 -திற்கும் மேற்பட்டடோர் கலந்துக் கொண்டனர்.