கென்ய – நைரோபி

கென்ய நாட்டு நைரோபிய நகரின் ஆப்ரிக்க ரிட்ரீட் சென்டரில் பிரம்மா குமாரிகளின் 7 – வது சர்வதேச ரிட்ரீட் நடைபெற்றது. “Appreciating My Life and Retreat to Reconnect with the Self” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் USA, UK, Doha, Dubai மற்றும் இந்தியாவிலிருந்து 54 BK சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள். இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுயமுன்னேற்றத்திற்கான ஊக்கம் அளிக்கப்பட்டது. ஆப்ரிக்க பிரம்மாகுமாரிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் B.K.வேதாந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். அகமதாபா த் மகாதேவ்நகர் பொறுப்புச் சகோதரி B.K.சந்திரிகா அவர்கள் உள்நோக்கு முகத்தை பற்றி வகுப்பு அளித்தார்.
பிரம்மாகுமாரிகள் நடத்தும் Future of Power Project -இன் ஒருங்கிணைப்பாளர் B.K.Nizar Juma அவர்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார். மூத்த இராஜயோகி ஆசிரியை B.K.பிரதிபா அவர்கள் Pause for Peace என்ற தலைப்பில் உரையாடினார்.