ஆந்திரா – விஜயவடா

ஆகஸ்ட் 3 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநில புதிய ஆளுநர் மாண்புமிகு. பிஷ்வபு+ஷன் ஹரிசந்தன் அவர்களுக்கு பிரம்மாகுமாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள். விஜயவாடாவை சேர்ந்த B.K.பாரதி, B.K..பத்மஜா, B.K.ராதா, B.K.சந்திரசேகர் ஆகிய சகோதர, சகோதரிகள் பூச்செண்டு மற்றும் இறைநினைவு பரிசு கொடுத்து கௌரவித்தார்கள். அம்மாநிலத்தில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தினர் நடத்திக்கொண்டிருக்கும் சேவைகளைப் பற்றி விளக்கிக் கூறினார்கள். மேலும் பிரம்மாகுமாரிகள் இயக்க தலைமையகமான மவுண்ட் அபுவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பும் விடுத்தார்கள்.