டெல்லி

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் கல்வித்துறை மற்றும் இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இருவரும் இணைந்து புதுடெல்லியில் அம்பேத்கார் சர்வ தேச மையத்தில் புது ஞானத்தின் மூலம் புது பாரதம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடத்தினார்கள். நம் நாடு மற்றும் சமூதாயத்தின் முதுகெலும்பாக கல்வி விளங்குகிறது. இந்த கருத்தரங்கு ஒரு சமூதாயத்திற்காகவோ, ஒரு தேசத்திற்காகவோ அல்ல முழு உலகத்தின் முன்னேற்றத்திற்காவும் நடத்தப்படுகின்றது. ஏனென்றால் பண்புகள் மற்றும் ஆன்மீகம் தற்பொழுது அனைவருக்கும் தேவைப்படுகின்றது. இதன் மூலமாகத்தான் சுகம், சாந்தி பெற முடியும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் மாண்மிகு Dr.ரமேஷ் போக்ரியால் அவர்கள் கூறினார்.
இவ்விழாவினை மத்திய அமைச்சரோடு பிரம்மா குமாரிகள் கல்வித்துறையின் தலைவர் மற்றும் கருத்தரங்கின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் B.K.மிருத்யுஞ்சய், மூத்த இராஜயோக அசிரியை B.K.ஷிவானி, UGC இயக்குனர் பேராசியர் D.P.சிங், மத்திய கிழக்கு, வடஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள Q.S.புலனாய்வு பிரிவின் பிரந்திய இயக்குனர் அஸ்வின் பெர்னான்டஸ், Professor மற்றும் எழுத்தாளர் Dr.Yogendra Sharma ரஷ்யா பிரம்மாகுமாரிகள் அமைப்பின் இயக்குனர் மற்றும் டெல்லி சக்தி நகரின் பொறுப்பு சகோதரி B.K.சக்ரதாரி, ஹரிநகர் சேவை நிலைய பொறுப்பு சகோதரி B.K.சுக்லா ஆகியோர்கள் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.