லடாக்

லடாக்கின் மிக பெரிய ஊரான லேயில் உலக அமைதி மற்றும் மகாத்மா காந்தியின் 150 -வது ஜெயந்தியை முன்னிட்டு சர்வ தேச அளவிலான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பிரம்மாகுமாரிகளுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில்; ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் தியானத்தின் மூலமாக உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்காக லண்டனின் World Book Records -இன் சார்பாக Peace Ammbassador -ராக வந்திருந்த UN Global Peace Initative -வினுடைய பிராந்திய இயக்குநர் B.K.Dr.பின்னி கௌரவிக்கப்பட்டார். உலக சாந்திக்காக முதன் முறையாக 300 புத்த துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தாய்லாந்து முதல் இந்தியாவில் உள்ள லே வரை அமைதி நடைப்பயணத்தை மேற்கொண்டார்கள். இதை தலாய்லாமா தர்மசாலாவில் வரவேற்றார். உலகத்தின் மிக உயர்ந்த லடாகிலிருந்து அமைதிக்கான செய்தியைக் கொடுத்தார். விழாவானது மகாபோதி சர்வதேச தியான நிலையத்தின் இயக்குநர் பிக்கு.சங்காசென் மூலமாக மலையின் உச்சியில் உள்ள போஃத்சுவேத்குபந் சாந்தி ஸ்தூபில் நடைபெற்றது. இதில் UK, USA, கனடா, தாய்லாந்து, தென்கொரியா, நேபால் மற்றும் பாரதத்திலிருந்து 500 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றார்கள்.