தஞ்சாவூர்

இரக்ஷா பந்தன விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் தியான நிலைய பொறுப்புச் சகோதரி B.K.ஞானசௌந்தரி சட்டமன்ற உறுப்பினர் திரு.TKG.நீலமேகம் அவர்களுக்கு இராக்கி அணிவித்தார். முன்னாள் மேயர் திருமதி.சாவித்ரி கோபால், திரு.கோபால் ஆகியோருக்கு B.K.சுமதி இராக்கி அணிவித்தார். வழக்கறிஞர் திரு.அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாதுரை, தஞ்சை தொழிலதிபர் திரு.இராமநாதன், மேலும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.பாலசுப்ரமணியம், பதிவாளர்.திருமதி.உமா ஆகியோருக்கு சகோதரி B.K.மீரா இராக்கி அணிவித்தார்.
தஞ்சையில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. சகோதரி B.K.ஞானசௌந்தரி அவர்கள் விழாவினை நடத்தினார்கள். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள், ராஸ லீலை நடனம் ஆகியவை நடைபெற்றதோடு கிருஷ்ணணுக்கு வெண்ணெய் ஊட்டியும், பிகே சகோதர, சகோதரிகளுக்கு கிருஷ்ணன் இனிப்பு ஊட்டியும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.