Madubhan – shantivan

மும்பையின் புகழ்பெற்ற பஜனை சக்கரவர்த்தி பத்மஸ்ரீ அனூப் ஜலோடாதமது இசைநிகழ்ச்சியால் அனைவரையும் உற்ச்சாகபடுத்தினார்.
பிரம்மாகுமாரிகள் அமைப்பின் ஆனந்தசரோவர் வளாகத்தில் ஓவியப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆதில் பங்கேற்க நாடுமுழுவதிலுமிருந்து 257 ஓவியர்கள் பங்கேற்றனர். “ஆன்மீகத்தின் மூலம் உலகில் அமைதியை ஏற்படுத்துவது” எப்படிஎன்ற கருத்தில் போட்டி நடைபெற்றது. இந்தபோட்டியில் டெல்லி கலைகல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். வரையப்பட்ட ஓவியங்களில் தியானம், யோகா, மகிழ்ச்சி, அமைதி, அன்பு முதலிய கருத்துக்களை கலைநயத்துடன் வெளிப்படுத்தினார்கள்.
நிறைவுவிழாவில் மக்கள் அவை சபாநாயகர் மாண்புமிகு.ௐ பிர்லா தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனது உரையில் “மனித மாண்புகள் குறைந்து வருகின்றன, பலநாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றன வன்முறை சூழல் வளர்ந்துவருகிறது அப்படிப்பட்ட சூழலில் பாரதம் மட்டுமே உலகில் முழுமையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பரப்பும் செய்தியை வழங்கிவருகிறது என்று கூறினார். மேலும் ஜாலூர்சிரோஹி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தேவ்ஜி, திரு.எம் படேலும் தமது கருத்துகளை தெரிவித்தார்கள்.
எனது பாரதம் பசுமையானபாரதம் என்ற இயக்கத்தில் பங்கேற்ற பிகே.சகோதர, சகோதரிகளுக்கும், ஜெய்பூர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.ராஜேஷ், திரு.அஸ்னானிபாஸ்கர் செய்தித்தாளின் ஆசிரியர் பிகே.பிரியங்கா கௌசல், டில்லி யு.என்.ஐ.யின் ஆசிரியர் சிவானிநோரியால், நியூஸ் 24 இன் ஆசிரியர் கவிதாசிங் சௌகான் ஆகியோருக்கும் நினைவுபரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.