Wed. Jul 2nd, 2025

மவுண்டஅபு

தீபாவளித் திருநாள் தேசமெங்கும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எங்குபார்த்தாலும் தீபங்களின் வெளிச்சம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இத்திருநாளை பட்டாசு வெடித்தும், புஸ்வானம் கொளுத்தியும் விதவிதமாகக் கொண்டாப்பட்டது. ஆனால் இராஜஸ்தான் மாநிலத்தின் மவுண்டஅபுவில் சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது. பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் அகில உலக தலைமையகத்தின் பாண்டவபவனம், ஞானசரோவர் மற்றும் சாந்திவன் வளாகத்தில் உலகத்தின் இருளை நீக்கும் செய்தியோடு தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில் பிரம்மா குமாரிகளின் இயக்கத்தின் முக்கிய தலைமை நிர்வாகி இராஜயோகினி தாதி ஜானகி, இணைத் தலைமை நிர்வாகி இராஜயோகினி தாதி இரத்தன்மோகினி, பொதுச் செயலாளர் பிகே. நிர்வேர், இணைத் தலைமை நிர்வாகி இராஜயோகினி பிகே இசு தாதி, ஊடகத்துறைத் தலைவர் பிகே கருணா, நிர்வாகச் செயலாளர் பிகே.மிருத்யுஞ்சய், ஞானசரோவர் கல்விவளாக இயக்குநர் பிகே டாக்டர் நிர்மலா, பிரம்மா குமாரிகளின் நிர்வாக இயக்குநர் பிகே முன்னி, ஐரோப்பிய சேவை மையங்களின் இயக்குனர் பிகே ஜெயந்தி, மலேசியப் பொறுப்புச் சகோதரி பிகே. மீரா மற்றும் ஜப்பான் பொறுப்புச் சகோதரி பிகே ரஜினி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தி அறியாமை அகற்ற ஞான விளக்கங்களை அளித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *