டெல்லி

டெல்லி ஞான் விங்ஞான் பவனத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் பாரளுமன்றத்தின் பத்தாவது தேசிய மாநாட்டில் மூத்த இராஜயோக ஆசிரியர் பிகே சிவானி அவர்களுக்கு ‘இளைய ஆன்மிக குரு’ என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அது இந்தியாவின் ஆன்மிக மறுமலர்ச்சிக்கு சிறந்த பங்களித்ததற்காகவும் உலகம் ஒரு குடும்பம் என்பதை பிரச்சாரம் செய்ததற்காகவும் வழங்கப்பட்டது. கூடவே மதுவனத்தின் குலோபல் மருத்துவமனையின் மேலாளர் டாக்டர் பின்னிசரின் அவர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி மாண்புமிகு எம்.வெங்கையா நாயுடு, முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் மாண்புமிகு கிரண் ரிஜ்ஜு, பஞ்சாப் முதலமைச்சர் மாண்புமிகு அமரீந்தர் சிங் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களால் துவக்கி வைக்கப்பட்டது.