திருச்சி

திருச்சி இரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களுக்கு தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பி.கே.பீனா அவர்கள் “STRESS FREE LIVING’’ என்ற தலைப்பில் உரையாற்றி புனித ராக்கி அணிவித்தார். இதில் 100 வீரர்கள் பங்கேற்றனர்.
திருச்சி சட்டமன்ற உறுப்பினர் மேலும் முன்னாள் மாநில அமைச்சருமான திரு. KN நேரு மற்றும் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்களுக்கும் தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பி.கே.பீனா அவர்கள் புனித ராக்கி அணிவித்தார்.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு சந்திரசேகர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருநாவுக்கரசு, திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.சிவராசு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.வினய், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தனியரசு, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இராம ஜெயலிங்கம், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக அரசு தலைமைக் கொறடா, திரு.தாமரை.இராஜேந்திரன், ராஜ்யசபா உறுப்பினர் திரு.திருச்சி.சிவா ஆகியோர்களுக்கு திருச்சியைச் சார்ந்த பிரம்மாகுமாரி சகோதரிகள் புனித ராக்கி அணிவித்தார்கள்.
திருச்சியில் பிரம்மா குமாரிகள் சார்பாக பார்வைதிறன் குறைந்தோருக்கான பள்ளி குழந்தைகள் 90 பேருக்கு இறை ஞானம் அளித்து ராக்கி அணிவிக்கப்பட்டது.
பிரம்மா குமாரி சகோதரிகள் திருச்சி மாவட்ட காவலர்களுக்கு “STRESS FREE LIVING’’ என்ற தலைப்பில் உரையாற்றி புனித ராக்கி அணிவித்தனர். இதில் 300 காவலர்கள்; பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிகளை திருச்சி கிளை நிலைய பொறுப்பு சகோதரி இராஜயோகினி பி.கே. மல்லிகா அவரகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.