Tue. Apr 30th, 2024

மதுரை

மதுரை செப்டம்பர் 13-ம் தேதி ஸ்ரீ லீலாதேவி பவனத்தில் வட இந்தியர்களுக்கான சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுபன் பிரம்மா குமாரிகளின் ஆன்மீக துறையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சகோதரர் பி.கே.ராம்நாத் அவர்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார். இப்போது செய்யும் செயல்கள் மற்றும் முந்தைய பிறவி செய்த செயல்களே  நம் வாழ்வில் அனைத்து விதமான மகிழ்ச்சி மற்றும் துக்கங்களுக்கு காரணம் என கூறினார். எண்ணங்களே அனைத்து செயல்களுக்கும் விதையாக உள்ளது. நாம் செய்யும் செயல்களுக்கேற்ப நல்ல மற்றும் கெட்ட பலன்களை நாம் அறுவடை செய்கிறோம் என்றார். நல்ல எண்ணகளுடன் இறைவனுடன் தொடர்பு சரியான முறையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். பிரம்மா குமாரிகள் கற்றுத்தரும் இராஜயோக தியானம் நமக்கு இறைவன் பரமாத்மா சிவனுடன் தொடர்புக் கொள்ள உதவி செய்கின்றது. மேலும் விஷேசமாக வாழ்க்கையில் சமநிலை கொள்வதறற்கான வழிமுறைகளையும் வழங்கினார். அனைவரும் நேரம் எடுத்து இறைவனைத் தியானிக்க வேண்மென கேட்டுக்கொண்டார். நல்ல ஆழமான கனவற்ற, தொந்தரவற்ற தூக்கம் வருவதற்கு நல் எண்ணங்கள் அவசியம் என விளக்கினார். மூத்த இராஜயோக ஆசிரியை சகோதரி பி.கே.செந்தாமரை அவர்கள் இராஜயோகம் பற்றி உரையாற்றி தியான அனுபவம்  செய்வித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு. C.R.பட்டேல் முன்னாள் பிரசிடண்ட் மணிவா, திரு.மோகன்லால் சவுதர் முன்னாள் பிரசிடண்ட் மணிவா, திருமதி.பல்லவி, திருமதி. சுமன்ஜி, மணிவாவைச் சேர்ந்த நடப்பு பிரசிடண்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *