சென்னை அடையாறு

சென்னையில் God of Gods தழிழ் படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி கணபதிராம் திரையரங்கில் அடையாறு நிலையத்தின் சார்பாக திரையிடப்பட்டது. அப்போது TV புகழ், அரசியல்வாதி, கலைமாமணி திருமதி.நிர்மலா பெரியசாமி, திரைப்படநடிகர்கள் திரு.ரவி மற்றும் கௌரவ் கபூர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி Dr.G.சந்தானம், நேரு யுவகேந்திரா அமைப்பின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில இயக்குனர் திரு. M.N.நடராஜ், நேரு யுவகேந்திரா அமைப்பின் மாநில இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு.J.சம்பத்குமார், சக்தி சுகர்ஸ் தொடர்பு அதிகாரி திரு.P.பாஸ்கரன், L&T பயிற்சி தலைவர் பி.கே.பிரேம்குமார், நகராட்சி நகர திட்டமிடல் துணை இயக்குனர் பி.கே.கோபாலகிருஷ்ணன், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அடையாறு தியான மைய பொறுப்பு சகோதரி பி.கே.முத்துமணி அவர்கள் நாம் ஒரு இறைவனிடம் அனைத்து உறவுகளையும் கொள்ள வேண்டும். அதன் மூலம் அனைத்து சக்திகளையும் பெறமுடியும் என்பதை இப்படத்தின் மூலம் புரிந்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.
முன்னாள் இந்தியன் மெரிடைம் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr.P.விஜயன் அவர்கள் இப்படம் நமது வாழ்க்கை தரத்தையும், நமது வாழ்க்கையின் நெறிமுறைகளையும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை எடுத்துகூறும் படமாக உள்ளது என்று கூறினார்.
கல்வியாளர் M.S.சௌமியா அவர்கள் இந்த படம் தனக்குள்ளே புத்துணர்வையும், சக்தியையும், திருப்தியையும் அளித்ததாக கூறினார். இப்படத்தை தயாரித்த பிரம்மா குமாரிகள் குழுவினர் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை வழங்கினார்.
திரைப்படநடிகர் திரு.ரவி அவர்கள் இப்படம் மற்ற படங்களிலிருந்து தனித்துவம் வாய்ந்த படமாக, தன்னுடைய வாழ்நாளில் மிகபெரிய அனுபவமாக இருந்தது. என்று கூறினார்.
கலைமாமணி திருமதி.நிர்மலா பெரியசாமி அவர்கள் இத்திரைப்படம் தனக்குள்ளே நேர்மறையான அதிர்வலைகள் மற்றும் முழுமையான ஆனந்தத்தை தந்ததாக கூறினார்.
மான்ட்போர்ட் சிறகுகள் அனாதை குழந்தைகள் பள்ளியிலிருந்து காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும், கண் தெரியாத குழந்தைகளும் இத்திரைப்படத்தை காண வந்திருந்தனர். அவர்கள் இப்படம் இறைவன் ஒருவரே என்பதை எடுத்துக் கூறுவதாக உள்ளது என தங்களுடைய செய்தியாக கூறினார்கள். சுமார் 220 குழந்தைகள் கண்டும், கேட்டும் மகிழ்ந்தனர்.
இத்திரைப்படம் ஒற்றுமை பற்றியும், உலகில் ஒற்றுமையை கொண்டு வருவதற்கு பிரம்மா குமாரிகள் எடுத்துக்கொள்ளும் முயற்சியையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி Dr.G.சந்தானம் தன்னுடைய அனுபவ உரையில் கூறினார்.