படிண்டா – பஞ்சாப்

பஞ்சாப்பில் உள்ள படிண்டா சேவை மைய பிரம்மா குமாரிகள், நேர்மறையான சிந்தனை மற்றும் மன அழுத்தமற்ற வாழ்க்கை என்ற தலைப்பில், மத்திய சிறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். மதுவன சகோதரர் பிகே பகவான் அவர்கள் சிறைவாசிகளுக்கு சிறப்புரை வழங்கினார். அப்போது உதவி கண்காணிப்பாளர்கள் திரு.பூபேந்திரசிங், மற்றும் திரு. ராகுல்ராஜா, பிகே குணால், பிகே மோஹித் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிகே பகவான் சகோதரர் உரையாற்றும் போது – பழிவாங்குவதற்கு பதிலாக தன்னை மாற்றி காட்டுவதற்காக இந்த இடம் இருக்கிறது. நமெல்லாம் இறைவனுடைய குழந்தையாக இருக்கிறோம். அவர் அமைதி கடலாக இருக்கிறார், மேலும் கருணை, இரக்கம் மற்றும் மன்னிப்பு கடலாக இருக்கிறார். நாம் தன்னை மறந்ததால் அப்படிப்பட்ட தவறுகள் செய்கிறோம். தர்மராஜபுரியில் தலைவணங்கும்படியோ, பச்சாதாபப்படும்படியோ, அழும்படியோ எந்த காரியங்களும் செய்யக்கூடாது.
அவகுணங்கள் மிக மோசமானது அதை விரட்ட வேண்டும். பொறாமை படுவது, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது, திருடுவது, பேராசை படுவது எல்லாம் நமது விரோதிகளாக இருக்கிறது. இவைகளுக்கு அடிமையாகும் காரணத்தால் நாம் நமது மானம் மரியாதைகளை இழக்கிறோம். தீயவற்றை தூரவிலக்குவதே நல்ல மனிதர்களுக்கு அடையாளமாக இருக்கிறது. இந்த அவகுணங்களே நம்மை ஏழையாக்குகிறது. இதிலிருந்து விலகியிருப்பது வாழ்வில் நல்ல குணங்களை கடைபிடிக்க உதவி செய்கிறது. வாழ்வில் நல்ல குணங்கள் இல்லாமல் இருப்பதே பிரச்சனைகள் உருவாக காரணமாக இருக்கிறது. மனித வாழ்க்கை விலைமதிப்பற்றதாக இருக்கிறது. அதை வீண்செயல்கள் செய்து வீணாக இழக்கக்கூடாது. இக்கட்டான சூழ்நிலைகளை பரீட்சை என உணர்ந்து பொறுமை மற்றும் தையிரியத்தோடு கடந்து செல்ல வேண்டும். அப்போது அனேகவிதமான துக்கம் மற்றும் ஏமாற்றத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். வுர்ழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து நல்ல குணவானாகும் லட்சியம் கொள்ள வேண்டும் என்றார். பிறகு உதவி கண்காணிப்பாளர். திரு பூபேந்திரசிங் அவர்கள் உரையாற்றுகையில், உங்களது செயல்களை மாற்றிய பிறகே சமூகத்தோடு இணைய முடியும். அதற்கு இந்த ஞான விசயங்களை அமல்படுத்துவது அவசியமாக இருக்கிறது என்றார்.