மஹாராஸ்ட்ரா

மஹாராஸ்ட்ராவில் உள்ள தேவ நகரம் எனப்படும் பிம்பரி நகரில் பிரம்மாகுமாரிகளின் புதிய திவ்ய ஜோதி பவனம் கட்டப்பட்டது. அதை இயக்கத்தின் இணை தலைவி தாதி இரத்தன்மோகினி அவர்கள் தனது திருக்கரங்களால் திறந்து வைத்தார். இது புதிய பவனத்தின் திறப்பு விழா மட்டும் அல்லாமல் பிம்பரி தியான மையத்தின் வெள்ளி விழாவாகவும் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பாலாஜி வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தாதிஜி அவர்கள் மிக சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்கள். சேவை நிலைய பொறுப்பு சகோதரி பி.கே.சுரேகா மற்றும் குவாட்டர் கேட் துணை மண்டல பொறுப்பு சகோதரி பி.கே.பாரு ஆகியோர் பங்கேற்றனர்.
நாம் உளமார இந்த ஆன்மீக ஞானத்தை சிந்தனை செய்து நமக்குள் பகிர்ந்து கொள்வதோடு அதிகாலையில் இருந்து இறைவனை நினைவு செய்வதால் அவரிடமிருந்து மகிழ்ச்சி மற்றும் சக்தி இரண்டும் கிடைக்கிறது என்று தாதிஜி அவர்கள் பெரும் சபையில் இருந்த அனைவருக்கும் கூறினார். பின்னர் சட்ட மன்ற உறுப்பினர் ஜகதாப் உள்ளிட்ட பல விருந்தினர்கள் தங்கள் கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் சேவாஞ்சலி என்ற பெயரிடப்பட்ட சஞ்சிகை தாதியின் புனித கைகளால் வெளியிடப்பட்டது. மேலும் பிம்பரிமா நகராட்சி அதன் மிக உயர்ந்த கௌரவத்தை தாதிஜி அவர்களுக்கு வழங்கியது. மேயர் மைதோர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் லஷ்மன் ஜகதாப் ஆகியோர் தாதிஜி அவர்களை கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைத்து சகோதர சகோதரிகளும் அதனை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.