Wed. Jul 2nd, 2025

ஈரோடு

ஈரோடில் சிவஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஈரோடு பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் ஈரோடு செங்குந்தர் மஹால் மற்றும் கோபிசெட்டிபாளையம் அப்புச்சிமார் மடத்தில் மூன்று விதமான லிங்கங்கள் அமைத்து கண்காட்சியினை ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தமிழ் நாடு மருத்துவ துறையின் செயலாளர் டாக்டர்.சி.கே.சரஸ்வதி, தங்கம் மருத்துவமனையின் செயலாளர் டாக்டர்.தங்கம், கொங்கு மஹாலின் பொது செயலாளர் திரு.சின்னசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். முக்கிய விருந்தினர்கள் அனைவரும் திருவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் சிவ ஜெயந்தியை பற்றி விளக்கமளித்தனர். மேலும் பிரம்மா குமாரிகள் சகோதர சகோதரிகள் பொது மக்கள் அனைவருக்கும் இராஜயோக படவிளக்கங்களை அளித்தனர். சுமார் 2000 பொது மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *