Chennai,Tamil Nadu

அடையார் நிலையம் வைகுண்ட் லைட்ஹவுசில் ஜூன் 6-ம் தேதி பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகளுக்கு இராஜயோக சிறப்பு வகுப்பு நடைபெற்றது. மதுபன் வரதான பூமியில் இருந்து மூத்த சகோதரர் இராஜயோகி Dr.B.K.மிருத்தஞ்சய் மற்றும் மூத்த சகோதரி இராஜயோகினி B.K.முத்துமணி அவர்கள் உரையாற்றினார்கள்.
இதனைத் தெடார்ந்து மகாபலிபுரம் மஹாப்ஸ் ஹோட்டலில் “ஆன்மீகத்தின் மூலம் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளுதல் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த சகோதரர் இராஜயோகி Dr.B.K.மிருத்தஞ்சய் அவர்கள் தான் யார் என்பதை உணர்ந்து பரமாத்மாவுடன் தொடர்பை ஏற்படுத்தினால் வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று எடுத்துரைத்தார்.
சைதாப்பேட்டை St.தாமஸ் மவுண்ட் இரயில் நிலையத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு படவிளக்கக் கண்காட்சி மற்றும் நாடகங்கள் நடத்தப்பட்டது. இதில் 1000-த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து பயனடைந்தார்கள்.
ஜூன் -7 -ஆம் தேதி அன்று கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுசக்தி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மூத்த சகோதரர் இராஜயோகி Dr.B.K.மிருத்தஞ்சய் அவர்கள் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளரர்களுக்கு அணுசக்தியில் வல்லுநராக இருக்கும் நீங்கள் ஆன்மீக சக்தியிலும் வல்லுநராக வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அணுசக்தி நிலைய இயக்குனர் டாக்டர்.திரு.ஸ்ரீநிவாஸ் மேலும் திரு.பத்மநாபன் உள்ளிட்ட மூத்த அறிவியல் அதிகாரிகள் சுமார் 80 பேர் கலந்துகொண்டார்கள்.