Madhuban – Shantivan

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜி அவர்களின் 12 வது நினைவு நாளை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள் தலைமையகமான சாந்திவனத்தில் 5 -வது அகில உலக மாரத்தான் பந்தயம் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த பந்தயத்தில் இந்தியா, கென்யா, கனடா, உகண்டா, எத்தியோப்பியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து 2500 -க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு சாந்திவனத்தில் இருந்து பாண்டவ பவனம் வரையான 21 KM தூரத்தை கடந்தனர். இதில் முக்கிய விருந்தினராக மாவட்ட பிரமுகர் திரு பாயல் பரசுராம் புரியா, முன்னாள் துணை கொறடா ரத்தன் திவாசி, குஜராத் திரைப்பட நடிகை பல்லவி பட்டேல், பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் இராஜயோகி B.K.மிருத்யுஞ்சய் சமூக நடவடிக்கை செயலக குழுத் தலைவர். B.K.பரத் ஆகியோர் காலை 6.00 மணி அளவில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த பந்தயம் உலகெங்கும் மதுவனத்தின் சிறப்பை பறைசாற்றும் என சிறப்பு விருந்தினர்கள் கூறினார்கள்.