மதுரை

ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.இராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரம்மாகுமாரிகள் மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் சகோதரி B.K.உமா இராக்கி அணிவித்து இரக்ஷா பந்தனின் ஆன்மிக ரகசியத்தை எடுத்துரைத்தார்.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி மதுரை விஷ்வ சாந்தி பவனத்தில் நகரின் முக்கியஸ்தர்களுக்கு இரக்ஷா பந்தன விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சகோதரர் N.கிருஷ்ண மூர்த்தி, மதுவனத்தின் காட்லிவுட் ஸ்டுடியோ தமிழ்த்துறை தலைவர் சகோதரர் B.K.ஜெயக்குமார், மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் சகோதரி B.K.உமா மற்றும் சகோதரி B.K.ராணி ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு திருவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் இராக்கி அணிவிக்கப்பட்டு அதன் மகத்துவத்தை பற்றிய விளக்கமளிக்கப்பட்டது.
மதுரை நாகமலை :
மதுரை நாகமலை நகர கருமாத்தூரில் நீர் வேளாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கமும் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து விவசாயிகளுக்கு நீர் ஆற்றல் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம் நடத்தினார்கள். இந்த முகாமிற்க்கு பிரம்மாகுமாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மதுரை நாகமலை பொறுப்பு சகோதரி B.K.ஆஷா “இயற்கை விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பு” “யோக வேளாண்மை” ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றினார். மேலும் வந்திருந்த அனைவருக்கும் இராக்கி அணிவித்தார்.
மதுரை மத்திய கலால்துறை அதிகாரிகள், BSNL பொது மேளாளர் போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு இராக்கி அணிவிக்கப்பட்டது. மத்திய காவல்துறை இணை ஆணையர் திரு. V.பாண்டிராஜா, வருமானவரி முதன்மை ஆணையர் Dr.அமர்வீர் சிங், BSNL முதன்மை பொது மோளாளர் திருமதி. S.E.ராஜம், ஹைடெக் அராய் பொது மேளாளர் திரு.பன்ஜீரா, வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு.கோபாலகிருஷ்ணன், மத்திய காவல்துறை உதவி ஆணையர்கள் திரு.நவீன் அகர்வால், மற்றும் திரு. R.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சகோதரி B.K.வள்ளி இராக்கி அணிவித்தார். வடமலையான் மருத்துவமனை திரு. V.புகழகிரி, திருமதி. பாலசரஸ்வதி ஆகியோருக்கு சகோதரி மனோரஞ்சினி இராக்கி அணிவித்தார்.
மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.விசாகன், தமிழ்நாடு மாநில வருவாய் அமைச்சர் திரு. R.B.உதயக்குமார், தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞான சம்பந்த சுவாமிஜி, மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகி திரு.நடராஜன் ஆகியோருக்கும் மதுரை போத்தீஸ் உரிமையாளர் திரு.முருகேசன் மற்றும் அங்கு பணிபுரியும் 2500 பணியாளர்களுக்கும் மதுரை சம்பந்தமூர்த்தி தியான மைய மூத்த இராஜயோக ஆசிரியர் B.K.செந்தாமரை அவர்கள் இராக்கி அணிவித்தார். பின்னர் பெரியார் பேருந்து நிலையம் Signal, கோரிப்பாளையம் பேருந்து நிலையம் Signal -களில் பொது மக்களுக்கு இராக்கி அணிவிக்கப்பட்டது.