சென்னை

சென்னை பிரம்மா குமாரிகள் ஆன்மீக கலைக்கூடம் (அருங்காட்சியகம்) உலக பாரம்பரிய தொல்பொருள் நகரமான மகாபலிபுரத்தில் திறக்கப்பட்டது. அந்த இடத்தின் மிக பெரிய தொல்பொருள் செல்வத்தை காண இந்திய மற்றும் அகில உலகிலிருந்து அனேக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அங்கு பல பாறை சிற்பங்கள், மற்றும் குகை சிற்பங்கள் உள்ளது. இந்நகரத்திற்கு வருபவர்கள் அனைவருக்கும் ஆன்மீக கலைக்கூடம் மிக பெரிய சேவை மையமாக அமையும். மேலும் இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் விளங்கும். இந்த அருங்காட்சியத்தில் ஜோதிர் லிங்க தரிசனம், ஆடியோ-விஷீவல் ஹாலோகிராம், தியானஅறை, மேலும் தத்ருப இராஜயோகம் சம்பந்தப்பட்ட சித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நூலகம் மற்றும் அனேகவிதமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய விஷயங்கள் உள்ளது.
தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பி.கே.பீனா மற்றும் சென்னை அடையார் பொறுப்புச்சகோதரி இராஜயோகினி பி.கே.முத்துமணி ஆகியோர் கலைக்கூடத்தை திறந்து வைத்தார்கள். கிழக்கு கடற்கரைச்சாலை நெடுஞ்சாலை நுழைவாயிலில் ஆர்ட் கேலரியின் பெயர் பலகை திறக்கப்பட்டது. இத்திறப்பு விழாவினை தொடர்ந்து சகோதரி பி.கே.பீனா அவர்கள் பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் ராக்கியை அணிவித்தார்கள்.