Fri. Jul 4th, 2025

ஞானசரோவர்

வெள்ளி விழாவை முன்னிட்டு ஞானசரோவர் வளாகமானது கண்கவரும் வண்ணமய விளக்குகளால் வெகுசிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற விருந்தினர்கள் மற்றும் பிரமாண சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க விழாவை கொண்டாடினார்கள். சிறந்த உலக கல்விக்கூடம் என்று அழைக்கப்படும் இந்த வளாகத்தில் கடந்த 25 வருட பயணத்தில் அமைப்பின் இருபது துறைகளின் மூலமாக லட்சகணக்கான மனிதர்கள் அமைதி மற்றும் ஆனந்தத்தில் மூழ்கிருக்கிறார்கள். முழு உலகிற்க்கும் அமைதி மற்றும் ஒற்றுமையின் செய்தி தரும் இந்த சரோவரின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை சிறப்பிக்க தேசத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி மாண்புமிகு வெங்கையா நாயுடு, பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி மற்றும் மக்களவை சபாநாயகர் மாண்புமிகு ௐ பிர்லா முதலியோர் செய்திகள் மூலம் வாழ்த்துக்களையும் நல்விருப்பங்களையும் அனுப்பியுள்ளனர்.

முக்கிய விருந்தினர் செய்தி வழங்கும் பொழுது – ஞானசரோவர், சமூதாயத்திற்கு நல்லொழுக்கங்கள் மற்றும் சிறந்த பண்புகளை வழங்குவதில் பாராட்டுக்குறிய பங்கு பெற்றுள்ளது என்றும் இந்த அமைப்பின் செயல்பாடுகளின் வெற்றிக்கு அனைவரும் நல்விருப்பங்களை தெரிவிப்பதோடு உலகை மேம்படுத்த பிரம்மா குமாரிகள் அமைப்பு தொடர்ந்து பாடுபடும் என்றும் கூறினார்.

பல லட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்கள். ஞானசரோவரின் உருவாக்கம் 1992 –ஆம் ஆண்டில் தொடங்கியது. அதனை 1995– ஆம் ஆண்டு ஜனவரி 18 –ஆம் நாள் இயக்கத்தின் கூடுதல் தலைமை நிர்வாகி இராஜயோகினி தாதி இருதயமோகினி அவர்களின் உடலில் அவதரித்து ஜோதி சொருபமான கடவுள் சிவன் திறந்து வைத்தார். எனவே இந்த ஞானசரோவருக்கு வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நற்பண்புகள் பரிணமிக்க செய்கிறது. அதனால் மனிதரிலிருந்து தேவராக அல்லது பரிஸ்தாவாக மாற உத்வேகம் கிடைக்கிறது. இது இதிகாசத்தில் மானசரோவர் என்று சொல்வதை நினைவூட்டுவதாக உள்ளது. அதாவது அதில் மூழ்கி எழும் மனிதர்கள் பரிஸ்தாக்கள் ஆகிவிடுவதாக சொல்லப்பட்டுள்ளது. 1995 – ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட நிர்வாக சேவைபிரிவு, மருத்துவப்பிரிவு, ஊடகப்பிரிவு, சமூகசேவைப்பிரிவு, கல்விப்பிரிவு, பெண்கள் பிரிவு, கிராம மேம்பாட்டு பிரிவு என இருபது பிரிவுகள் மூலமாக அவ்வப்போது மாநாடுகள் ஏற்பாடு செய்து, உலக அமைதி, சமூக ஒற்றுமை, இராஜயோகத்தின் மூலம் சிறந்த வாழ்வு முதலிய தலைப்புகளில் தொடர்ந்து நற்செய்திகள் வழங்கப்பட்டு வருகிறது. 35 ஏக்கர் பூமியில் உருவாக்கப்பட்ட இந்த பரந்த வளாகத்தில் யுனிவர்சல் ஹார்மணி ஹால், ஆன்மிக கலைக்கூடம், இண்டர்நேசனல் சென்டர், தாதி ஜனாகி பார்க், தியான குவிமாடம், பாபா அறை, விசாலமான சமையல் மற்றும் சாப்பாட்டுக் கூடம், கழிவு சுத்தகரிப்பு நிலையம், சூரிய வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் நீர் சூடுபடுத்துதல், தாதி காட்டேஜ் உள்ளிட்ட பல அவசிய வசதிகள் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது. அங்கே உலகெங்கிலும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் வந்து தங்கள் வாழ்வை சிறந்ததாக்கும் பாக்கியத்தை பெறுகிறார்கள். இந்த புனித பூமியில் உலகெங்கிலும் உள்ள முக்கியஸ்தர்களும் பிரபலங்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

ஞானசரோவர் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிர்சா மக்களவை உறுப்பினர் மாண்புமிகு சுனிதா துக்கல், ஹைதராபாத்தின் சாத்விக் வெப் சொலியூசன் நிர்வாக தலைவர் திரு கிருஷ்ணா ரெட்டி, தொழிலதிபர் மேரி ரெட்டி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ஞானசரோவர் வளாகத்திற்கு சொர்கத்தின் வழிகாட்டி என்ற பட்டத்தை கொடுத்தார்கள்.

மேலும் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மட்டுமல்லாது பொதுச்செயலாளர் இராஜயோகி பிகே நிர்வேயர், கூடுதல் பொதுச்செயலாளர் இராஜயோகி பிகே  பிரிஜ்மோகன், நிர்வாகச்செயலாளர் இராஜயோகி பிகே மிருத்யுஞ்சய், ஞானசரோவர் இயக்குனர் இராஜயோகினி டாக்டர் பிகே நிர்மலா ஆகியோரும் விழாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் டெல்லி ௐசாந்தி ரிட்ரீட் இயக்குனர் இராஜயோகினி பிகே ஆஷா, இராஜயோக ஆசிரியர் பிகே சிவானி, அயல்நாட்டு மூத்த சகோதரிகள் அமெரிக்கா பிரம்மா குமாரிகள் இயக்குனர் பிகே மோகினி, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இயக்குனர் பிகே ஜெயந்தி ஆகியோரும் பங்குபெற்று தங்களது இனிய வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இவ்விழாவின் இராண்டாவது நிகழ்ச்சியில் ஞானசரோவர் வளாக அங்கத்தினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் பலஆண்டுகளாக தன்னலமற்ற உணர்வோடு உலக நன்மைக்காக தங்களை அற்பணித்து வருகிறார்கள். மேலும் ஞானசரோவர் வளாகத்தை சிறந்த முறையில் பராமரிக்க முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *