Fri. Jul 4th, 2025

News

Madurai,Tamil Nadu

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிரம்மாகுமாரிகளின் தியான நிலையம் சார்பாக அண்ணாநகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது….

Chennai,Tamil Nadu

அடையார் நிலையம் வைகுண்ட் லைட்ஹவுசில் ஜூன்  6-ம் தேதி பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகளுக்கு இராஜயோக சிறப்பு வகுப்பு நடைபெற்றது. மதுபன்…

Kanchipuram, Tamil Nadu

மே 18-ம் தேதி காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80…

Thiruvarur, Tamil Nadu

திருவாரூர், பூந்தோட்டம் நகரில் உள்ள அருள்மிகு சரஸ்வதி அம்மன் கோவிலில் ஜுன் 1-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களாக இராஜயோக…

Gyan Sarovar, Mount Abu

ஞானசரோவர் : மவுண்ட்அபு பிரம்மா குமாரிகள் ஞானசரோவரில் ஆன்மீகத்தின் மூலமாக நாட்டின் பெருந்தன்மை, நேர்மை மற்றும் ஒற்றுமையை உறுதி செய்ய…

Mount Abu,Rajasthan

மவுண்ட்அபு : பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமையகமான மவுண்ட்அபு சாந்திவனில் Gods Power for Golden Age -ன் தொடக்க…

Thoothukudi

மே 11-ம் தேதி பிரம்மாகுமாரிகள் ஓம்சாந்தி தியான மண்டபத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் 100 மாணவ, மாணவியர்…

Thanjavur,Tamil Nadu

तमिलनाडु के तंजावुर सेवाकेंद्र पर अक्षय तृतीय के निमित एक विशेष ‘दीपध्यानम‘ कार्यक्रम सेवाकेंद्र प्रभारी…

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிரம்மாகுமாரிகளின் தியான நிலையம் சார்பாக அண்ணாநகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் 01 முதல் 07 வரை பொதுமக்களுக்கு இப்புகை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு இலவசமாக இராஜயோக தியானப் பயிற்சி வகுப்புகள் நடத்தபெற்றது.

மதுரை நாகமலையில் 25 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆறாவது கள்ளர்நாடு எருதுக்கட்டு திருவிழாவில் 3 நாட்களுக்கு மீனாட்சி நகர் பிரம்மாகுமாரிகள் சார்பாக இராஜயோக தியானப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் 50,000 -த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 10 கிராமங்களுக்கு இராஜயோக தியான வகுப்புகள் நடத்தப்பட்டது. சகோதரி B.K.ஆஷா இந்நிகழ்ச்சிகளை நடத்தினார்.

மதுரை மஹாதானி பிரம்மாகுமாரிகள் சார்பாக ஜூன் 4 -ஆம் தேதி பெண் பயிற்சி காவலர்கள்களுக்கு மன அழுத்ததிலிருந்து விடுபட இராஜயோக தியான பயிற்சி வழங்கபட்டது. ஜூன் 5 -ஆம் தேதி ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் வருகின்ற சிவ பக்தர்களுக்கு 7 நாட்கள் இராஜயோக தியான வகுப்புகள் நடத்தபட்டது. மதுரை ஜெய்ஹிநத்புரம் வீரபத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  சகோதரி B.K.அமிர்தா இந்நிகழ்ச்சிகளை நடத்தினார்.