Fri. Jul 4th, 2025

News

சென்னை

சென்னை பிரம்மா குமாரிகள் ஆன்மீக கலைக்கூடம் (அருங்காட்சியகம்) உலக பாரம்பரிய தொல்பொருள் நகரமான மகாபலிபுரத்தில் திறக்கப்பட்டது. அந்த இடத்தின் மிக…

இரஷ்யா

இரஷ்யாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக கடந்த 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட சேவைகளையும், உறுப்பினர்களின் ஆன்மீக பயணத்தையும் நினைவுகூரும் வரலாற்று தருணங்களை…

Madhuban – Gyansharovar

மதுவனத்தின் ஞானசரோவர் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாடு பல்வேறு ஆக்கப்பூர்வமான படைப்புகளோடு  நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குவாலியர் ஐடிஎம் பல்கலைக்…

பரமக்குடி

இராக்ஷா பந்தன விழாவை முன்னிட்டு பரமக்குடி நகரில் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிளை நிலைய பொறுப்பு சகோதரி பிகே கமலா…

திருவாரூர்

திருவாரூர் இராஜயோக நிலையத்தில் கொண்டாடப்பட்ட இராக்ஷா பந்தன விழாவில் மூத்த இராஜயோக ஆசிரியர் சகோதரி B.K.செந்தாமரை அவர்கள் அனைத்து B.K.சகோதர,…

கும்பகோணம்

கும்பகோணத்தில் நடைபெற்ற இராக்ஷா பந்தன விழாவில் சுதந்திர போராட்ட தியாகி திரு. S.கோவிந்தசாமி அவர்களுக்கு  தஞ்சாவூர் நிலைய பொறுப்புச் சகோதரி…

தூத்துகுடி

அகஸ்ட் 15-ஆம் தேதி தூத்துகுடி ௐ சாந்தி தியான மண்டபத்தில் ஊக்கமளிப்பு விழா நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக மதுவன லிட்ரேச்சர்…

Podinayakkanur

ஆகஸ்ட் 31-ஆம் தேதி போடிநயக்கD}ரில் இராக்ஷா பந்தன் விழா மற்றும் கிருஷ்ணஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரம்மாகுமாரி சகோதரிகள்…

வேதாரண்யம்

ஆகஸ்ட் 28-ஆம் தேதி வேதாரண்யத்தில் இராக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை துணை மண்டல சேவை ஒருங்கினைப்பாளர் சகோதரி…

சென்னை பிரம்மா குமாரிகள் ஆன்மீக கலைக்கூடம் (அருங்காட்சியகம்) உலக பாரம்பரிய தொல்பொருள் நகரமான மகாபலிபுரத்தில் திறக்கப்பட்டது. அந்த இடத்தின் மிக பெரிய தொல்பொருள் செல்வத்தை காண இந்திய மற்றும் அகில உலகிலிருந்து அனேக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அங்கு பல பாறை சிற்பங்கள், மற்றும் குகை சிற்பங்கள் உள்ளது. இந்நகரத்திற்கு வருபவர்கள் அனைவருக்கும் ஆன்மீக கலைக்கூடம் மிக பெரிய சேவை மையமாக அமையும். மேலும் இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் விளங்கும். இந்த அருங்காட்சியத்தில்  ஜோதிர் லிங்க தரிசனம், ஆடியோ-விஷீவல் ஹாலோகிராம், தியானஅறை, மேலும் தத்ருப இராஜயோகம்  சம்பந்தப்பட்ட சித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும்  நூலகம் மற்றும் அனேகவிதமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய விஷயங்கள் உள்ளது.

தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பி.கே.பீனா மற்றும் சென்னை அடையார் பொறுப்புச்சகோதரி இராஜயோகினி பி.கே.முத்துமணி ஆகியோர் கலைக்கூடத்தை திறந்து வைத்தார்கள். கிழக்கு கடற்கரைச்சாலை நெடுஞ்சாலை நுழைவாயிலில் ஆர்ட் கேலரியின் பெயர் பலகை திறக்கப்பட்டது. இத்திறப்பு விழாவினை தொடர்ந்து சகோதரி பி.கே.பீனா அவர்கள் பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் ராக்கியை அணிவித்தார்கள்.